லைஃப் ஸ்டைல் - உங்கள் அன்றாட தூக்கத்தைத் தடுக்கும் 5 பழக்கங்கள்.!

website post (4)

நீங்கள் வேலையில் கவனம் செலுத்த சிரமப்படுகிறீர்களா? அல்லது நீங்கள் முதலில் எழுந்தவுடன் பழைய நினைவுகளை நினைவுபடுத்துகிறீர்களா? நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா? இவை அனைத்தும் தூக்கமின்மையின் அறிகுறிகளாகும். இது நீங்கள் போதுமான தூக்கம் பெறவில்லை அல்லது தேவையானதை விட குறைவான மணிநேரம் தூங்கவில்லை என்பதைக் குறிக்கிறது. புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் எழுந்திருக்க ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல தூக்கம் தேவை. நாம் எடுக்கும் எண்ணற்ற செயல்கள் நமது உறக்க திறனை எதிர்மறையாக பாதிக்கிறது. இது தற்செயலாக நமது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நமது தூக்க முறைகளை மாற்றுவதன் மூலம், நமது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக உயர்த்த முடியும்.ஸ்லீப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரியங்கா சலோட் தூங்குவதை கடினமாக்கும் ஐந்து நடத்தைகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். 

தூங்குவதற்கு முன் திரையைப் பயன்படுத்துதல்

தூங்குவதற்கு முன் நாம் அனைவரும் போன், லேப்டாப், கணினி உள்ளிட்ட சாதனங்களை சந்தோஷமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால், என்றைக்காவது ஏன் நமது உடல் சோர்வாக இருக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா? பல நபர்கள் தங்கள் மடிக்கணினிகளைப் பயன்படுத்திய பிறகு அல்லது தூங்குவதற்கு முன் தொலைக்காட்சியைப் பார்த்த பிறகு தூங்க முடியாமல் போராடுகிறார்கள். எனவே, நன்றாக தூங்குவதற்கு படுக்கைக்கு முன் மின் சாதன பயன்பாடுகளின் நேரத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. 

தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி

உடற்பயிற்சி முக்கியம் தான் ஆனால், தூங்குவதற்கு செல்லும்முன் கடுமையாக உடற்பயிற்சி செய்வது நல்லது இல்லை. அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் தூக்க நேரத்தையும் உடலின் ஆற்றல் திறனையும் குறைக்கிறது. தூங்குவதற்கு முன் யோகா, உடற்பயிற்சி சாதாரணமாக மேற்கொண்டால் நன்றாக தூக்கம் வரும். 

மெத்தை 

போஃம் பஞ்சுகளால் செய்யப்பட்ட மெத்தை அல்லது தலையணையில் தூங்குவது கடினமாக இருக்கும். மெத்தை வலியின் விளைவாக பலர் தூக்கத்தில் உருண்டு தள்ளாடுகிறார்கள். நீங்கள் தூக்கத்தில் சிரமங்களை சந்தித்தாலோ அல்லது சோர்வாக இருந்தாலோ போஃம் பஞ்சுகளால் செய்யப்பட்ட மெத்தையைத் தவிர்ப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்.

தூக்க நேரத்தில் காஃபியை உட்கொள்வது

நம்மில் பலருக்கு இது தெரியாது என்றாலும், காஃபி மற்றும் டீ-யின் நேரம் தவறிய பயன்பாடுகள் நம்மை தூங்க விடாமல் தடுக்கிறது. அது விழித்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்தும். உறங்குவதற்கு முன் அல்லது இரவு உணவிற்குப் பின் காஃபி மற்றும்  டீயை உட்கொள்வது, நம் விருப்பத்திற்கு மாறாக வேலை செய்வதைப் போன்றது. அது தூங்குவதை கடினமாக்குகிறது.

சுற்றுப்புறச்சூழல்

ஒரு நல்ல தூக்கத்திற்கு சுற்றுப்புறச்சூழல் ஒரு முக்கிய காரணியாகும். மக்கள் தூங்குவதற்கு ஒரு ஒளி இல்லாத சூழலை எதிர்பார்க்கிறார்களே தவிர, சுற்றுப்புறத்தில் நடக்கும் சத்தங்களை கண்டுகொள்வதில்லை. பக்கத்து அறையில் அல்லது ஜன்னலுக்கு வெளியே யாராவது சத்தமாக பேசும்போது, தூங்குவது மிகவும் கடினம். ஆகையால், அமைதியான சுற்றுச்சூழலை உருவாக்குவது தூக்க சுகாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.