மதுப்பழக்கத்தை கைவிட "சிப்" பொறுத்திக்கொண்ட சீனர்.!

5 நிமிடம் தான் மதுப்பழக்கத்திற்கு "குட் பை" சொல்லி விடலாம்.!

chip

சீனாவைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு 'சிப்' ஒன்றை பொருத்திய சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. உலகிலேயே முதல் நபராக இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டார் என்ற பெயரையும் பெற்றுள்ளார். 

5 மாதத்திற்கு விடுதலை

1 முறை இந்த ‘சிப்’பை பொருத்தினால் 5 மாதங்களுக்கு மதுப்பழக்கத்திலிருந்து விடுதலை பெறலாம் என்று இந்த சிப்பை பொறுத்திய நபரான ஹாவ் தெரிவிக்கிறார். சிப் பொருத்தப்படும் போது, ​​உடலால் உறிஞ்சப்பட்டு மூளையில் உள்ள நால்ட்ரெக்சோனை வெளியிடுகிறது. நால்ட்ரெக்ஸோன் என்பது போதைப்பொருள் சிகிச்சையில் மறுபிறப்பைத் தடுக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.

தினசரி வழக்கம்

ஹாவ் ஒரு 15 வருட காலமாக மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அவர் தினமும் அரை லிட்டர் சீன மது அருந்துவதை பழக்கமாக கொண்டிருந்தார். காலை உணவுக்கு முன் மது அருந்துவதும், பிறகு வேலை செய்யும் இடத்திலும், மாலை நேரத்திலும் மது அருந்துவது அவரது தினசரி வழக்கமாக இருந்தது. தன்னிடம் மது பாட்டில் இல்லாதபோது எனக்கு கவலையாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னுடைய உடல்நலம், பெற்றோர், காதலி என அனைத்தையும் என்னுடைய மது பழக்கத்தால் இழந்துவிட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

சீனா முதலிடம்

சிப் பொருத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் மருத்துவ பரிசோதனைகளை உள்ளூர் மருத்துவமனையில் தொடங்கியுள்ளதாக அவர் கேள்விப்பட்டு, தானும் அந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். அந்த சிகிச்சை வெறும் 5 நிமிடங்களில் முடிந்துவிடும். பின்னர் நான் மதுவில் இருந்து விடை பெற்று விடுவேன் என்று அவர் மகிழ்ச்சியாக தெரிவித்தார். சிகிச்சைக்குப் பிறகு, மது இல்லாமல் வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம் என்று நம்பினார். தி லான்செட் மருத்துவ இதழின் 2018 அறிக்கையின்படி, ஆல்கஹால் தொடர்பான இறப்புகளில் சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.