உலகின் சிறந்த சைவ உணவுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏழு இந்திய உணவு வகைகள்.!

vegan

சைவ உணவுகளின் மீதான பிரியம் கடந்த காலங்களில் அதிகரித்து இருக்கிறது. சைவ உணவு என்பது தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு ஆதரவாக இறைச்சி, பால் மற்றும் முட்டை உள்ளிட்ட விலங்கு பொருட்களைத் தவிர்ப்பதை ஊக்குவிக்கும் ஒரு வாழ்க்கை முறை ஆகும். சைவ உணவு சுவையாகவும், மாறுபட்டதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிக சைவ உணவு உண்பவர்கள் வாழும் நாடாக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த பிராந்தியத்திலிருந்து ஏழு உணவுகளுடன் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய உணவு  வகைகளான மகராஷ்டிரா மாநிலத்தின் மிசல் பாவ் வகை உணவு 11-வது இடத்திலும், ஆலு கோபி 20-வது இடத்திலும், ரஜ்மா 22-வது இடத்திலும் மற்றும் கோபி மஞ்சூரியன் 24-வது இடத்திலும் உள்ளது. மேலும், மசால வடை 27-வது இடத்திலும், பேல்பூரி 37-வது இடத்திலும் மற்றும் ராஜ்மா சாவல் வகை உணவு 41-வது இடத்திலும் உள்ளது. 

ஆலு கோபி வட இந்தியாவின் ஒரு பாரம்பரிய உணவு வகையாகும். ஆலு கோபி மஞ்சள், பூண்டு, இஞ்சி, சீரகம், கொத்தமல்லி மற்றும் சிவப்பு மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்களை சார்ந்துள்ளது. ராஜ்மா சாவல் வகை உணவு வட இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தாலும், அது உண்மையில் மத்திய மெக்ஸிகோ மற்றும் கெளதமாலாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், இந்திய உணவுகளைவிட மெக்ஸிகோ வகை உணவு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். சத்தான ராஜ்மா பஞ்சாப் மற்றும் வட இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் சைவ கறிகளில் ஒன்றாகும்.

கோபி மஞ்சூரியன் ஒரு பாரம்பரிய இந்தோ-சீன உணவாகும். இது வறுத்த காலிஃபிளவரால் (கோபி) செய்யப்படுகிறது. இந்த வகை உணவு வறுத்ததாகவும் குழம்பாகவும் செய்யப்படுகிறது. 27-வது இடத்தில் உள்ள மசாலா வடை, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகையாகும். இது சனா பருப்பு, வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் விதைகள், உலர்ந்த சிவப்பு மிளகு, தாவர எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பிடித்தமான பேல்பூரி இந்தியா முழுவதும் உள்ள கஃபேக்கள் மற்றும் தெரு வண்டிகளில் வழங்கப்படும் ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இது மும்பையில் ஒரு பிரபலமான உணவு வகையாகும். இந்தியா முழுவதும் எல்லோருக்கும் பிடித்தமான இந்த பேல்பூரி எங்கிருந்து வந்தது என்பது பற்றியான விவரங்கள் இதுவரைக்கும் தெரியவில்லை. ஆனால், இதை ஒரு குஜராத்திற்கு இடம்பெயர்ந்த ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.