நீடா அம்பானி ஷ்லோகா மேதாவிற்கு வழங்கிய நெக்லஸின் விலை தெரியுமா? 

shloka ambani necklace

முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி அவரது முதல் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தின்போது மருமகன் ஷ்லோகா மேதாவிற்கு பரிசாக வழங்கிய நெக்லஸின் விலை குறித்து தகவல்கள் வெளியாகி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அம்பானியின் குடும்பம்

திருபாய் அம்பானியின் மகனான முகேஷ் அம்பானி கடந்த சில வருடங்களாக உலக பணக்காரர்களில் முக்கியமானவராக இருந்து திகழ்ந்துவருகிறார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான நண்பராக மட்டும் இல்லாமல் அம்பானியின் மொத்த குடும்பமே பிரதமர் மோடிக்கு நெருக்கமாக திகழ்ந்துவருகிறது. இந்நிலையில் அம்பானியின் குடும்பத்தில் என்ன நிகழ்ச்சி நடந்ததாலும், அதில் செய்யப்படும் ஆடம்பர செலவுகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் மிகவும் கவர்ந்துவருகிறது. இதைப்போல சமீபத்தில் நீடா அம்பானி, தொடங்கிய நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் தொடக்க விழா மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள், பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபலமான திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

ஆகாஷ் அம்பானியின் திருமணம்

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியின் திருமணம் கடந்த 2019ம் ஆண்டு மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அந்த திருமணம் குறித்தும் திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவு, ஆடம்பர நகைகள் குறித்தும் அப்போதே செய்திகளாக வெளியானது. இந்நிலையில் அந்த திருமணத்தின்போது ஆகாஷ் அம்பானியின் மனைவியும் நீடா அம்பானியின் மருமகளுமான ஷ்லோகா மேதாவிற்கு திருமண பரிசாக வழங்கிய ஆடம்பர நெக்லஸின் விலை ரூ.450 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. NYC ஜென்ஸ்டோனின் மொத்த விற்பனையாளர் ஜூலியா ஹேக்மேன் ஷேஃபே இதுகுறித்து தெரிவித்தபோது நீடா அம்பானி, உலகளவில் வேறு எந்த நகைகளுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு சிறப்பு வாய்ந்த நகை என தெரிவித்துள்ளார். மேலும் அந்த நகை உலகத்திலேயே நீளமான எந்த குறையும் இல்லாத வைர நெக்லஸ் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.