உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - தடுமாற்றத்தில் இந்திய அணி

ind vs aus

469 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

ஐசிசி நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பிற்பாதியில் நிலைத்து நின்று ரன்களை குவித்தது. ட்ராவிஸ் ஹெட் (163)  மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (121) ஆகியோரின் சிறப்பான சதத்தால் 469 ரன்கள் குவித்தது. 

தடுமாற்றம் கண்ட இந்தியா

இதைத் தொடர்ந்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சில் தடுமாறினர். கேப்டன் ரோஹித் ஷர்மா15 ரன்னிலும், கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இவரைத் தொடர்ந்து புஜாராவும் 14 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும், ரஹானேவும், நிதானமாக ஆடி ரன்களை சேர்ந்தனர். 

சரிவில் இருந்து மீட்ட ஜடேஜா - ரஹானே 

இவர்களின் நிலையான ஆட்டத்தால் இந்திய அணி மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 48 ரன்னில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 151 ரன்கள் குவித்தது. ரஹானே 29 ரன்களுடனும் பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.