சாட் ஜிபிடி என்றால் என்ன? எப்படி இயங்குகிறது.?

சாட் ஜிபிடி என்றால் என்ன? எப்படி இயங்குகிறது.?

gpt 1

சாட் ஜிபிடி என்றால் என்ன?

கூகுள் தேடு பொறிக்கும் சாட் ஜிபிடிக்கும் (CHAT GPT) உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், கூகுல் தேடலில் ஒரு வரியையோ அல்லது வாக்கியத்தையோ கேள்வியையோ எழுப்புகிறோம் என்றால் நிறைய லிங்குகளை நமக்கு காட்டும். அதில் இருந்து நமக்குத் தேவையான லிங்க் எடுத்து பார்த்து கொள்கிறோம். ஆனால், சாட் ஜிபிடி-யில் நாம் ஒரு கேள்வி எழுப்பும்போது நாம் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்க்கான சரியான விடையை நேர்த்தியோடு கொடுக்கும் என்று தகவல் சொல்லப்படுகிறது. 

சாட் ஜிபிடி நாம் என்ன கேட்கிறோமோ அதற்கு ஏற்றபடி நேர்மறையான தகவல்களைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கும் இணையத்திற்கும் இடையில் நடக்கப்படும் உரையாடல் தான் சாட் ஜிபிடி. சாட் ஜிபிடியிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது, உங்களோட சிந்தனையையும், ஒரு கைதேர்ந்த நிபுணர்களோட சிந்தனையையும் ஒற்றுமைப்படுத்தி, நமக்கு என்ன தேவையோ அதை நேர்த்தியான முறையில் விளக்கத்தோடு கொடுப்பதுதான் சாட் ஜிபிடியின் சிறப்பம்சம் என்று சொல்லப்படுகிறது.   

இந்த அளவிற்கு ஒரு தொழில்நுட்பம் கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட் ஜிபிடி, தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்திய டிக் டாக், பத்து கோடி பயனாளர்களைப் பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில், தொடங்கப்பட்ட இரண்டே மாதங்களில் 10 கோடி பயனாளர்களை பெற்றிருக்கிறது என்று தகவல் சொல்லப்படுகிறது. 

சாட் ஜிபிடியோட வளர்ச்சியை பார்த்த கூகுள் நிறுவனமும் தற்போது பார்டு (BARD) என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவு இயங்கு தளத்தையும் மக்கள் மத்தியில் கூடிய விரைவில் கொண்டுவரப்போவதாக தெரிவித்திருக்கிறது. இதுவும் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு விரைவாகவும் நேர்த்தியாகவும் கொடுக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சாட் ஜிபிடி - பார்டு - வேறுபாடு

சாட் ஜிபிடி சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய ஒரு இயங்குதளம். ஆனால், பார்டு என்பது ஒரு பன்னாட்டு நிறுவனமான கூகுள் உருவாக்கக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட இயங்குதளம். இந்த சாட் ஜிபிடி இயங்குதளம் ஜிபிடி 3 (GPT 3) என்கிற ட்ரான்ஸ்பர் மாடலை பயன்படுத்துகிறது. அதாவது, ஜெனரேட்டிவ் ப்ரீ - டிரெயிண்ட் டிரான்ஸ்ஃபார்மர் என்பதுதான். அந்தவகையில் ஃபார்டை பொறுத்தவரையில் லேம்டா(LamDa)என்று சொல்லக்கூடிய மாடலைத்தான் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

சாட் ஜிபிடி யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க, சாட் ஜிபிடி-யை பயன்படுத்தக் கூடாது என்று ஒருசில பல்கலைக்கழகங்கள் தடை செய்திருக்கிறார்கள். ஏனென்றால் மாணவர்கள் ஆசிரியகளிடமிருந்து கற்றுக்கொண்டு சிந்தித்து செயல்படக்கூடிய விஷயத்தை, சாட் ஜிபிடி மூலமாக எளிதாக தரவிறக்கம் செய்து எழுதிவிடுகிறார்கள் என்று கூறி அதற்கு தடை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாட் ஜிபிடியோடு ஒன்றுபடுத்தி பார்க்கும்பொழுது, பார்டு இன்னும் பெரும்பாலான மக்களிடத்தில் சென்றடையவில்லை, இன்னும் சோதனை முயற்சியில் இருப்பதால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்கள் மட்டும் தான் பயன்படுத்தி வருகிறார்கள். கூடிய விரைவில் அனைத்து மக்களிடத்திலும் பார்டு செயற்கை நுண்ணறிவு இயங்குதளத்தை கொண்டுவரப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

சாட் ஜிபிடி பிங் (BING) என்று சொல்லப்படுகிற கணினி பொறியோட இயங்கு தளமாக செயல்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. பார்டு கூகுள் நிறுவனத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தாலும்கூட மக்கள் மத்தியில், மனிதர்களின் உடல் உழைப்பும், சுயமாக சிந்திக்கக்கூடிய சிந்தனைத்திறனும் குறைக்கப்படுவதாக பொதுவான விமர்சனங்கள் வைக்கப்பட்டும் வருகிறது.