ட்விட்டர் இப்போது ‘டிட்டர்’.. பெயிண்ட் அடிக்கப்பட்ட ‘W' 

123

சேட்டை மன்னனின் சேட்டைகள்

உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்த ஸ்பேசக்ஸ் (Spacex) நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ட்விட்டரை வாங்கினார். பின்னர், ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பேற்றார். ட்விட்டரின் சிஇஓ-வாக எலான் மஸ்க் பொறுப்பேற்றதிலிருந்து ட்விட்டரில் மாற்றங்களை அடுத்தடுத்து கொண்டு வந்தார். குறிப்பாக, புளு டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்ட மாற்றங்களை கொண்டுவந்தார். அடுத்தடுத்த மாற்றங்களால் ட்விட்டரை ஆரம்பத்தில் சிறப்பாக செயல்படுத்தி வந்த எலான் மஸ்க், கடந்த சில நாட்களாக அவரது சேட்டைகளை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, ட்விட்டரில் ஏற்பட்ட மாற்றங்களால் ட்விட்டர் பயணர்கள் அதிருப்தியில் இருந்தநிலையில், ட்விட்டரின் லோகோவை மாற்றுவது, பெயர்களை மாற்றுவது போன்ற சேட்டையில் ஈடுபட்டு வந்ததால் எலான் மஸ்க் ஒரு இன்ஸ்பிரேஷன் ஐகானாக தெரிந்தநிலையில், தற்போது மக்கள் மத்தியில் அவர் தற்போது மக்கள் மத்தியில் சேட்டை மன்னனாக தெரிகிறார் என்றால் இது அவருக்கு அவரே சூனியம் வைத்துக்கொண்டார் என்றே கருதலாம். 

ட்விட்டர் இப்போது ‘டிட்டர்’

டிவிட்டர் செயலி அறிமுகமான காலகட்டத்தில் இருந்து லோகோவாக இருந்த அந்த நீல பறவை மாற்றப்பட்டு, அந்த லோகோவுக்கு பதில் ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் முகத்தை லோகோவாக மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இது ட்விட்டர் இணையதளத்தில் மட்டுமே மாறி இருக்கிறது. ட்விட்டரின் மொபைல் செயலியில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இது நிரந்திரமாக இருக்காது என கூறப்பட்டுவந்தநிலையில், சில நாட்களிலேயே அது மாற்றப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்தில் உள்ள ட்விட்டர் போர்டில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார் சேட்டை மன்னன் எலான் மஸ்க். தலைமையகத்தில் உள்ள Twitter போர்டில் "W"-வை பெயிண்ட் அடித்து Twitter-ஐ 'Titter' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், பலர் இது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த போர்டில் மாற்றம் செய்திருப்பது உண்மைதான் என்று எலான் மஸ்க் உறுதி செய்தார். 

எலான் மஸ்கின் செயல் குழந்தைத்தனமானது

எலான் மஸ்க்கின் இந்த செயலை பார்த்து இந்த நடவடிக்கை குழந்தைத்தனமானது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் மாற்றப்பட்ட லோகோவால், டோஜ்காயினின் சந்தை மதிப்பு ஏறக்குறைய $4 பில்லியனாக உயர்ந்தது. டோஜ்காயினின் மதிப்பை எலான் மஸ்க் வேண்டுமென்றே உயர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நீலப்பறவை மறுபடியும் மாற்றப்பட்ட பிறகு, டோஜ்காயினின் மதிப்பு 9 சதவீதம் வரை சரிந்தது. இந்தநிலையில் நேற்றைய தினம் ட்விட்டரின் பெயரை மாற்றி இருப்பது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.