மணிரத்னம் படங்களின் பெயர்களையே வரிகளாக கொண்டு வெளியான பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு

kushi

4 மொழிகளில் தயாராகும் படம்

தெலுங்கில் தயாராகும் குஷி என்ற திரைப்படமானது பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில் தயாராகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஷிவா நிர்வனா இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவெற்பை பெற்ற நிலையில், தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் இப்படம் தயாராகி உள்ளது. தற்போது குஷி படத்தின் புதிய பாடல் ஒன்றை படக்குழு வெளியிடுள்ளது. 

மணி ரத்னம் படங்களே பாடல்களாக..!

அதில் மணிரத்னம் இயக்கிய திரப்படங்களின் பெயர்களையே பாடல் வரிகளாக கொண்டு பாடலை இசையமைத்துள்ளனர். இந்த பாடலில் ரோஜா,  பம்பாய், உயிரே, அலைபாயுதே, மௌனராகம், பல்லவி, காற்றுவெளியிடை, இருவர், நாயகன், ராவணன், ஓகே கண்மணி, அஞ்சலி, ஆகிய படங்களின் பெயர் இடம்பெற்றுள்ளன. அதேபோல், மணிரத்னத்தின் படத்தில் இடம் பெறும் வசனங்கள், பாடல் வரிகளையும் இதில், பயன்படுத்தியுள்ளனர். இப்பாடல் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஹீஷம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.