தமிழ்நாடு அரசுக்கு தொழில் முனைவோர் மன்றம் பாராட்டு.!

TNEF 2

தமிழ்நாடு தொழில் துறையின் நிலப்பரப்பை மாற்றும் புதிய கொள்கைக்காக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மன்றம் (TNEF) தலைவர் டாக்டர் ரமேஷ் பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு தொழில் முனைவோர் மன்றம் (TNEF) மின்சார வாகன உதிரிபாகங்கள், பாதணிகள், கண்ணாடி உற்பத்தி மற்றும் விண்வெளித் துறைகள் உட்பட, ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு, கட்டமைக்கப்பட்ட தொகுப்புகளுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, தமிழக அரசை பாராட்டுகிறது. மாநிலத்தின் தொழில் துறையின் நிலப்பரப்பை மாற்றும் புதிய கொள்கைக்காக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு TNEF தலைவர் டாக்டர் ரமேஷ் பாபு வாழ்த்து தெரிவித்தார். அளப்பரிய பங்களிப்புகளைக் கொண்ட நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் மேலும் கவனம் செலுத்துமாறு அவர் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். டாக்டர் ரமேஷ் பாபு, அனைத்து முக்கிய துறைகளையும் மேம்படுத்துவதில் பாராட்டுக்குரிய முயற்சிகளுக்கு நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.