பிரபல நடிகர் சரத்பாபு ஐதராபாத்தில் இன்று காலமானார். 

actor sarathbaby passes away

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன

தென்னிந்திய திரைப்படங்களில் பிரபலமான நடிகராக இருந்தவர் சரத்பாபு. ரஜினிகாந்த், உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகரின் படங்களிலும், கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சரத்பாபு  அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளி வந்தன. இதனை சரத்பாபுவின் குடும்பத்தினர் மறுத்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து நடிகர் சரத்பாபு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இதனை அவரது குடும்பத்தினரும் உறுதிபடுத்தியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். 

கே.பாலசந்திரின் அறிமுகம்

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சரத்பாபு  1977ல் இயக்குநர் கே.பாலசந்தரால் "பட்டினப்பிரவேசம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். ஆனால் தமிழில் இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் இயக்குநர் கே பாலசந்தரின் "நிழல் நிஜமாகிறது". இதில் கமல்ஹாசனின் நண்பராக நடித்தார்.

முக்கிய தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற சரத்பாபு

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு. தமிழில், 'நிழல் நிஜமாகிறது', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், அண்ணாமலை, பகல்நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு, அன்று பெய்த மழையில் என்று தமிழின் பெருமைக்குரிய அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் சரத்பாபு நடித்து உள்ளார். 

பல விருதுகளை வென்ற நடிகர் 

கடைசியாக தமிழில் வெளிவந்த "வசந்த முல்லை" என்ற படத்தில் சரத்பாபு நடித்திருந்தார். ஆந்திர மாநில சினிமா விருதான நந்தி விருதை எட்டு முறை வென்றுள்ள இவர் "தமிழ்நாடு அரசு சினிமா விருது" என பல விருதுகளையும் வென்றுள்ளார்.