கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைப் பெறும் பாப் பாடகி மடோனா

madonna

இசை உலகின் ராணி

பிரபல அமெரிக்க பாப் பாடகியான மடோனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 1980 களில் இசை உலகில் உச்சத்தில் இருந்த மடோனா பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்த மைக்கேல் ஜாக்சனுக்கு இணையாக பேசப்பட்டார். மடோனா இசையமைத்து நடித்து வெளியிட்ட ‘Deeper And Deeper’ (1992), ‘Express Yourself’ (1989), ‘Don’t Tell Me’ (2000), ‘Borderline’ (1984), ‘Frozen’ (1998), ‘La Isla Bonita’ (1986), ‘Music’ (2000), ‘Hung Up’ (2005), ‘Vogue’ (1990), ‘Like A Prayer’ (1989) போன்ற பாடல்கள் மடோனாவை உச்சத்துக்கு கொண்டு சென்றன. தனது தனித்துவமான இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மடோனாவுக்கு இதுவரை 7 கிராமி விருதுகள் கிடைத்துள்ளது. 

திடீர் உடல் நலக் குறைவு

இந்நிலையில், மடோனாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், மடோனாவுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொடர் கண்காணிப்பில் இருந்த வந்த மடோனாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மடோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மடோனா மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இது மடோனா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  மடோனா மீண்டும் உடல்நலம் பெற வேண்டியும், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியும் அவரது ரசிகர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மடோனாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

கல்விச் சேவையில் மடோனா

தற்போது 64 வயதாகும் மடோனா இசை உலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக 7 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். இதனால், இந்த நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இசையில் மட்டுமல்லாது கல்வி சேவையையும் மடோனா ஆற்றி வருகிறார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை மடோனா கட்டியுள்ளார். இந்த பள்ளிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.