இனி நீங்கள் இந்த கார்களில் பாதுகாப்பாக பயணிக்கலாம்.. இதோ டாப் 5 பாதுகாப்பான கார்கள்.!

car

தற்போதைய காலகட்டத்தில் கார்களின் தேவை அதிகரித்து கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் எந்த காரை வாங்கலாம் என்று யோசிக்கும் அதேநேரத்தில், அந்த கார்களின் சிறப்பம்சங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கார்களின் பாதுகாப்பும், கார்களில் பயணிக்கும் பயணர்களின் பாதுகாப்பும் முக்கிய அம்சமாகும். அந்தவகையில், பலவித பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட நாட்டின் 5 பாதுகாப்பான கார்களைப் பற்றி பார்க்கலாம்.. 

டாடா பஞ்ச்

டாடாவின் மினி எஸ்யுவி கார் பஞ்ச் குளோபல் NCAP கார் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. கிராஷ் டெஸ்டிங்கில் 16.45 புள்ளிகள் (5 நட்சத்திரம்) பெற்றுள்ளது. இதில் குழந்தை பாதுகாப்புக்கு 49க்கு 40.89 மதிப்பெண்கள் இந்த மினி எஸ்யுவி கார் பஞ்சுக்கு கிடைத்துள்ளது. சைட் இம்பாக்ட் கிராஷ் டெஸ்டிலும் இந்த கார் வெற்றி பெற்றது. இதில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், முன் இருக்கை பெல்ட் ரிமைண்டர், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX குழந்தை இருக்கை ஏங்கர், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள் மற்றும் சறுக்குவதைத் தடுக்க லோ-ட்ராக்ஷன் மோட் ஆகியவை உள்ளன.

மஹிந்திரா XUV300

மஹிந்திராவின் சப்-4 மீட்டர் SUV பெரியவர்களுக்கான 5-ஸ்டார் மதிப்பீட்டில் 16.42 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 4 நட்சத்திரங்களுடன் 37.44 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த கார் ஜிஎன்சிஏபி-யின் சைட் கிராஷ் விபத்து சோதனையிலும் தேர்ச்சி பெற்றுள்ளது. காரில் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள், முன் பார்க்கிங் சென்சார்கள், ESC, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, பின்புற பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

டாடா அல்ட்ராஸ்

​​இது இந்தியாவின் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார் ஆகும். இது GNCAP-லிருந்து 5 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கான 17 புள்ளிகளில் 16.13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 49 புள்ளிகளுக்கு (3 நட்சத்திரங்கள்) 29 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த கார் சைட் இம்பாக்ட் க்ரேஷ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளது. இது இரட்டை காற்றுப்பைகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள், முன் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், உயரத்தை சரிசெய்யக்கூடிய முன் இருக்கை பெல்ட்கள், பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைப் உள்ளடக்கியுள்ளது.

டாடா நெக்ஸான்

காம்பாக்ட் எஸ்யுவி, Global NCAP-லிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்பில் இந்த கார் 17க்கு 16.06 (5 நட்சத்திரம்) மதிப்பெண்களைப் பெற்றது. குழந்தை பாதுகாப்பில் 49-க்கு 25 புள்ளிகளைப் பெற்றுள்ளது. GNCAP இன் சைட் கிராஷ் சோதனையிலும் கார் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த காரில் டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், முன் இருக்கை பெல்ட் ரிமைண்டர், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX குழந்தை இருக்கை ஏங்கர், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவை பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 பெரியவர்களின் பாதுகாப்பிற்காக 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களின் பாதுகாப்பில் 17-க்கு 16.03 மதிப்பெண்களையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 49-க்கு 41.66 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. எஸ்யூவியின் பாடி ஷெல் மற்றும் ஃபுட்வெல் பகுதியும் நிலையானதாகவும், முன்பக்க சுமைகளைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 7 ஏர்பேக்குகள், ADAS, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் போன்ற அம்சங்கள் இந்த காரில் உள்ளன.