அமெரிக்காவால் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை..!

stock market

அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவானது இந்திய பங்குச்சந்தையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. 


உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் முடிந்த பிறகு ஓரளவிற்கு பங்குச்சந்தை உயர்ந்தது.  ஆனால், தற்போது மீண்டும் போர் தொடங்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது மட்டுமல்லாமல், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்துவிடுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கு வாய்ப்பில்லை எனும் தகவல் வந்தாலும், இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனாலேயே அமெரிக்கப் பங்குச்ச்சந்தையானது நேற்று(18.11.2022) சரிவுடன் முடிந்தது. 

இந்த நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை சரிவு என்பது ஆசியச் சந்தையில் எதிரொலித்துள்ளதால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடனே தொடங்கியுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் பங்குகள் சரிவை நோக்கி இருக்கின்றன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 68 புள்ளிகள் குறைந்து, 61,912 புள்ளிகளுடன் உள்ளது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 18,372 புள்ளிகளுடன் உள்ளன. 

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்துள்ளன, 16 நிறுவனப் பங்குகள் விலை சரிந்துள்ளன.