விடுதலை படத்தின் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.!

soori

விடுதலை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 நாட்களை கடந்த நிலையில், உலகளவில் விடுதலை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகி இருக்கிறது.  

வெற்றிமாறன் இயக்கத்தில், கதாநாயகனாக நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் விடுதலை திரைப்படம் உலகளவில் ரூபாய்.52 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விடுதலை படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போதுள்ள தகவல்படி, 52 கோடி வசூலானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.