மாதம் ₹650 கோடி வருமானம்.. ஸ்டாக் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியப் பெண்.. யார் என்று தெரியுமா.?

website post (50)

பங்கு சந்தை கடந்த சில தினங்களாகவே ஏற்றத்தினை சந்தித்து வருகின்றது. இந்திய சந்தையில் லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் வலுவான வளர்ச்சியினைக் கண்டுள்ளன. இந்த ஏற்றமானது இப்படியே தொடருமா என்ற கேள்வியும், தொடர்ந்து அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பங்கு சந்தையில் ஏற்றம் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் வட்டி அதிகரிக்கும்போது அது அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. எனினும், மெட்ரோ பிராண்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பங்கின் விலை எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்குகள் ஏற்றம் கண்டுள்ள நிலையில், அதன் நிகரமதிப்பு சுமார் 650 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திலேயே தன்னுடைய நிகரமதிப்பை 650 கோடியாக உயர்த்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தில் திகைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அதன் பங்குதாரர் யார் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்தே ஆக வேண்டும்.

ரேகா ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா 2023 ஆம் ஆண்டு M3M Hurun உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இந்தியர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிறகு இந்த பங்குகள் முழுமையும் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் வந்தது. இதற்கு முன்னதாக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் இருந்தது.

யார் இந்த ரேகா ஜுன்ஜுன்வாலா

ரேகா ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் பங்குச் சந்தையின் பிக் புல் என்று அழைக்கப்படும் மறைந்த தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ஆவார். "ரேர் எண்டர்பிரைசஸ்" என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். டாடா குழும நிறுவனமான டைட்டனில் அவருக்கு பங்குகள் இருந்தன. மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் அவரது பங்களிப்புகளுக்காக, மார்ச் 22, 2023 அன்று அவருடைய மரணத்திற்குப் பிறகு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் அறிக்கை ஆகஸ்ட் 2022 நிலவரப்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் நிகர மதிப்பு  $5.8 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை மற்றும் கல்வி

ரேகா ஜுன்ஜுன்வாலா 1963-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி பிறந்துள்ளார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை 1987-ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் செய்தார். இவர்களுக்கு நிஷ்தா, ஆர்யமான் மற்றும் ஆர்யவீர் என்று மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

சொத்து மதிப்பு 

ரேகா ஜுன்ஜுன்வாலா மாதத்திற்கு சுமார் ரூ.650 கோடி வரை சம்பாதிக்கிறார். 2023 மார்ச் 22 நிலவரப்படி, ரூ. 25,655 கோடிக்கு மேல் நிகர மதிப்புள்ள 29 பங்குகளை அவர் பொதுவில் வைத்திருக்கிறார் என்று ட்ரெண்ட்லைன் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2022 காலாண்டில் மெட்ரோ பிராண்டில் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம், 3,91,53,600 பங்குகள் இருந்தன. ரேகா ஜுன்ஜுன்வாலாவின் கணவர் ஐபிஓ-வுக்கு முன்னதாகவே கணிசமான பங்குகளை வைத்திருந்தனர். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிறகு, இந்த பங்குகள் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் வந்துள்ளது.