ஐசிசி தரவரிசை - இந்திய வீரர் ஷுப்மன் கில் முன்னேற்றம்

shubman gill

தரவரிசை வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். 2-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்ஸி வான்டெர் துசென் தொடருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் சுப்மான் கில் உள்ளார். நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் ஆட்டமிழக்காமல் 67* ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 750 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 

10 வது இடத்தில் கோலி

இந்திய வீரர் விராட் கோலி 10-வது இடத்தில் தொடருகிறார். பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுடனான ஆட்டத்தின் போது கிஷன் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தரவரிசையில் 12 இடங்கள் உயர்ந்து 24 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் தொடருகின்றனர். ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்படும் பல நட்சத்திரங்கள் புதுப்பிக்கப்பட்ட பந்துவீச்சாளர் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். 

பாகிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முதல் இரண்டு ஆட்டங்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே சமயம் சக வீரர்களான ஹரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் இரண்டு இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். 

சூர்யகுமார் யாதவ் முதலிடம்

டர்பனில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான பரபரப்பான தொடர் மற்றும் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் மூன்று போட்டிகள் முடிந்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில் ஏராளமான மாற்றங்கள் உள்ளன. டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் மூன்றாவது இடத்திலும், ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 4-வது இடத்தையும் பிடித்துள்ளார். டி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் இரண்டு இடங்கள் உயர்ந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.