இணையத்தில் வைரலாகும் ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ்.. அப்டினா என்ன திமிங்கலம்.!

hif 2

அதெப்டி திமிங்கலம்

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு என பல்வேறு காப்பீட்டு பாலிசிகளை பார்த்திருப்போம். இந்நிலையில், காதலுக்கும் காப்பீடு உருவாக்கி, பிரேக் அப் ஏற்பட்டால் பணம் கிடைக்கும் என்ற புதிய பாலிசியை உருவாக்கியுள்ளனர். அதெப்டி திமிங்கலம்.. மாதிரி இருக்குல வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.

பிரேக் அப் இன்சூரன்ஸ்

காதலர்கள் இடையே பிரேக் அப் ஏற்பட்டால் துன்பம், மன வருத்தம் என்ற காலம் போய், இப்போது பிரேக் அப் ஏற்பட்டால் பணம் கிடைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்காகவே பிரேக் அப் இன்சூரன்ஸ் என்ற புதிய முறையை ஒருவர் தொடங்கிவைத்துள்ளார்.

இந்த பிரேக் அப் இன்சூரன்ஸ் பாலிசியை பிரதீக் ஆர்யன் என்ற நெட்டிசன் ஒருவர் உருவாக்கியுள்ளார். இவரது பாலிசிப்படி, காதலர்கள் இடையே ஒருவர் மற்றொருவரை ஏமாற்றினால், ஏமாந்தவருக்கு வங்கிக்கணக்கில் செலுத்தி வந்த மொத்த தொகையையும் கொடுக்க வேண்டும்.

யார் ஏமாற்றப்படுகிறார்களோ அவர்களுக்கு பணம்

பிரதீக் ஆர்யன் தனது காதலியுடன் இணைந்து பிரேக் அப் இன்சூரன்ஸ் பாலிசியை தாமாகவே தொடங்கியுள்ளார். இதன்படி, இருவரும் ஒரு கூட்டு வங்கிக் கணக்கில் (Joint account)மாதந்தோறும் 500 ரூபாய் செலுத்தி வர வேண்டும். யார் முதலில் ஏமாற்றப்படுகிறாரோ, அவருக்கு மொத்த இன்சூரன்ஸ் பணமும் சேர்ந்துவிடும்.

அதன்படி, பிரதீக் ஆர்யன் தனது காதலி தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த மார்ச் 15-ம் தேதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேக் அப் பாலிசி அடிப்படையில் இன்சூரன்ஸ் பணம் மொத்தமாக 25000 ரூபாய் தனக்கு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த இன்சூரன்ஸுக்கு ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் (Heartbreak Insurance Fund) எனவும் அவர் பெயர் வைத்துள்ளார்.

HIF சிஇஓ

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல், காதலில் விஸ்வாசமாக இருப்பவர்கள் மட்டுமே பிரேக் அப் இன்சூரன்ஸ் பாலிசியில் பயன் பெற முடியும் எனவும் பிரதீக் ஆர்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, பிரதீக் ஆர்யன் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்டின் (HIF)சிஇஓ என குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.