பசுமை சங்கமம் அறிமுக விழா..! 

Pasumai Sangamam

தி ரைஸ் எழுமின் அமைப்பின் முன்னெடுப்பான பசுமை சங்கமம் அறிமுக விழா 18-02-2023 அன்று திருவாரூரில் நடைபெற்றது. 

வடுவூர் ஏரி

திருவாரூரில் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே, வடுவூர் ஏரி 316 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து தமிழர்களின் நீர் மேலாண்மையின் மாபெரும் உன்னதமாய் திகழ்கிறது. இன்றைய பல்லுயிர் கோளத்தின் மாண்புகளை பறைசாற்றி கம்பீரமாய் நிற்கிறது. வடுவூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற பசுமை பூமி கரம் கோர்த்தது. இந்த மாபெரும் நிகழ்வில், பசுமை பூமியின் பசுமை சங்கமத்தை  கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், பசுமை தமிழ்நாடு  இயக்கத்தின் இயக்குனருமான  தீபக் ஸ்ரீவத்சவா, திருவாரூர் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ, மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் தலைவர் எஸ்.செந்தூர் பாரி, கிரீன் நீடா  தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு ஆகியோர் இணைந்து அறிமுகப்படுத்தினர். 

இந்நிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, இந்தியாவிலேயே அதிக ராம்சர் பகுதிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. அதில் வடவூர் பறவைகள சரணாலயம் மன்னார்குடியில் உள்ளது. வேடந்தாங்கலை விட மூன்று மடங்கு பெரியது வடவூர் சரணாலயம். இதனால் வடவூர் ஏரியை பாதுகாக்கும் பொருட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு, நீரில் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன. மேலும் தமிழ்நாட்டின் பசுமை பகுதியை 23.69 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதறாக பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் பசுமை சங்கம் நிகழ்விற்கும் அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.