Game of thrones,harry potter தொடர்கள் இனி ஜியோ சினிமாவில்...

jio cinemas

ஜியோ சினிமாஸ் ஒடிடி

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் தொழில் நிறுவனங்களுள் ஒன்று தான் ஜியோ சினிமாஸ். தற்போது திரைத்துறையிலும் கால் பதித்துள்ள ஜியோ நிறுவனம் ஒடிடி தளத்திலும் பெரும் பயனாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பிரபலமான மற்ற ஒடிடி நிறுவனங்களான நெட்ப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி ஹாட் ஸ்டாருக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது. 

உலக ரசிகர்களை ஈர்த்த Game of thrones,harry potter தொடர்கள்

இதனால் பிரபல ஹாலிவுட் தொடர்களின் உரிமைகளை வாங்கி ஜியோ சினிமாஸில் வெளியிட தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக உலக சினிமா ரசிகர்ளால் என்றும் மறக்க முடியாத ஃபேண்டஸி தொடர்களாக "Game of thrones" மற்றும் "harry potter" தொடர்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரு தொடர்களின் முழுமையான உரிமைகளையும் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் இதுவரை எந்த ஒடிடி தளத்திற்கும் ஒளிப்பரப்பும் உரிமையை வழங்கியதில்லை. இந்நிலையில், அதனை ஒடிடியில் வெளியிட HBO மற்றும் WARNER BROS நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜியோ சினிமாஸில் HBO மற்றும் WARNER BROS தயாரிப்புகள் 

இதனால் பல முன்னணி ஓடிடி நிறுவனங்கள் இத்தொடர்களின் உரிமைகளை வாங்க களத்தில் குதித்துள்ளன. அதில் ஜியோ சினிமாஸ் நிறுவனத்திற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தை உலக முழுவதும் பிரபலபடுத்தும் நோக்கோடு "Game of thrones" மற்றும் "harry potter" தொடர்களை அதிக விலைக் கொடுத்து வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவையெல்லாம் கைகூடும் பட்சத்தில் இந்த இரு தொடர்களை கண்டு களிப்பதற்காகவே உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஜியோ சினிமாஸ் ஒடிடி தளத்தை பயன்படுத்தக் கூடும் என தெரிகிறது.