ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை - நாளை மறுநாள் கோலாகல தொடக்கம்

fifa

பெண்கள் உலக கோப்பை

கால்பந்து போட்டிகளுகு உலகளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றன. சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு மத்தியில் கிளப் போட்டிகளும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் காலபந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஃபிஃபா அண்மையில் அறிவித்துள்ளது. அதன்படி. வரும் ஜீலை 20 ஆம் தேதி பெண்கள் கால்பந்து போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 

அதிக அணிகள் 

பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையின் ஒன்பதாவது பதிப்பான இத்தொடரில் முதல் முறையாக அதிக அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன் 24 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 32 அணிகள் போட்டியிடுவதால், போட்டிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆகஸ்டில் இறுதி போட்டி

கடந்த 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற அமெரிக்கா தற்போது ஹாட்ரிக் வாய்ப்பாக கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முழுவதும் உள்ள, ஒன்பது நகரங்களில் அமைந்துள்ள 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்ரும், இந்த நகரங்களில், சிட்னியில் மட்டும் இரண்டு இடங்களில் போட்டிகளை நடத்தப் படுவதாகவும் ஃபிஃபா தெர்வித்துள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி  ஆஸ்திரேலியாவில் வரும் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தை தீவிரமாக ஏற்பாடு செய்து வருகின்றன.

பரிசுத்தொகை

பங்கேற்கும் 32 நாடுகளுக்கான மொத்த பரிசுத் தொகை 110 மில்லியன் டாலர்கள் ஆகும், இது முந்தைய பதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தாரில் நடைபெற்ற ஆண்கள் போட்டியில் மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன் டாலர் ஆகும். FIFA கோப்பையை வெல்லும் அணிக்கு 10.5 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படும். அதில் 6.21 மில்லியன் டாலர்கள் வீரர்களுக்கும், 4.29 மில்லியன் டாலர்கள் அந்த கால்பந்து கூட்டமைப்புக்கும் வழங்கப்படும்.