காசிரங்கா தேசியப் பூங்கா

காசிரங்கா காண்டாமிருக எண்ணிக்கை குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் கேள்வி.!

ele

காசிரங்கா தேசியப் பூங்கா அல்லது காசிரங்கா வனவிலங்கு காப்பகம் இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கும் காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் இந்தியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகிலேயே இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கும் காசிரங்கா காடுகள், அஸ்ஸாமின் சுற்றுலாச் சிறப்புகளில் முன்னிலை வகிப்பவை. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குள்ளன. இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.

எழில் கொஞ்சும் காசி ரங்கா பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் மார்ச் 2022-ல் நடத்தப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறித்த உண்மையான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கோரியுள்ளது. காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பூங்காவிற்கு அருகில் வசிக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் ரோஹித் சவுத்ரியிடம் அதைப்பற்றிய தகவல் கேட்கப்பட்டது. அப்போது அவர், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் பூமியில் பெரும்பான்மையாக இருக்கிறது என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்களை மேற்கோள் காட்டினார். 

ஆர்வலர்களின் கூற்றுப்படி, காண்டாமிருகங்களின் உண்மையான எண்ணிக்கை 2,042 என்று தெரிவிக்கிறார்கள். ஆனால், 2018-ல் மதிப்பிடப்பட்ட 2,413 காண்டாமிருகங்களில் இருந்து 200 அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கிறார்கள். இதற்கு அஸ்ஸாம் வனத் துறை மற்றும் காசிரங்கா அதிகாரிகள் மருத்துவத் தரவை மறுத்து, தேசிய பூங்காவில் காண்டாமிருகத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சியான 2.7% உடன் ஒத்துப்போவதாகக் கூறினர். வனவிலங்கு அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் உண்மைகளை தவறாக சித்தரிப்பதாகவும், காசிரங்கா பூங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கிறார்கள்.