நடுத்தர மக்களுக்கான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

Electronic Car

இந்திய நடுத்தர மக்களுக்கான எலெக்ட்ரிக் கார் இன்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

மும்பையைச் சேர்ந்த பி.எம்.வி. எலெக்ட்ரிக் என்ற கார் நிறுவனம் Eas-E என்ற பேட்டரியில் இயங்கும் கார் ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களிலேயே குறைந்த விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலில் முன்பதிவு செய்யும் 10,000 பேருக்கு, இந்த ரூ.4,79,000 மதிப்பில் வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் அதன் விலை மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Eas-E என்ற காரை வாங்க இதுவரை PMV-Electric இணையதளத்தில் 6000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காரில் இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை என மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 120 கி.மீ முதல் 200 கி.மீ. வரை செல்ல முடியும்.