அதிக அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா..? - இந்தியாவின் இடம் என்ன?

nuclear weapons

இன்றியமையாத அணு ஆயுதம்

அணு ஆயுதங்களின் கையிருப்பை வைத்தே உலக நாடுகள் தங்களது ராணுவ வலிமையை வெளி காட்டி வருகின்றன. எதிரி நாடுகளை அச்சுறுவதற்கும், அவர்களை அடிப்பணிய வைப்பதற்கும் அணு ஆயுதங்கள் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இதில், உலகின் அனைத்து வல்லரசு நாடுகளும் அணு ஆயுதங்களை கையிருப்பு வைத்துள்ளது. மேலும், சில நாடுகள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மறைமுகமாக வைத்திருப்பதாகவும், அவற்றில் உலக நாடுகள் அனைத்தும் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிக அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் உலக நாடுகளின் பட்டியலை ”World of Statistics “ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவை முந்திய ரஷ்யா

அதன்படி, ரஷ்யா அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக உள்ளது. அந்நாடு 5,899 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா 5,244 அணு ஆயுதங்களை வைத்து இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், 3 வது இடத்தில் சீனா 410 அணு ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் 

ஃபிரான்ஸ் நாடானது 290 அணு ஆயுதங்களுடன் 3 வது இடத்திலும், இங்கிலாந்து 225 அணு ஆயுதங்களுடன் 5 வது இடத்திலும் உள்ளன. அதேபோல், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் 170 அணு ஆயுதங்களுடன் 6 வது இடத்திலும், இந்தியா 164 அணு ஆயுதங்களுடன் 7 வது இடத்திலும் உள்ளன. 8 வது இடத்தில் இஸ்ரேல் 90 ஆணு ஆயுதங்களுடனும், வட கொரியா 30 அணு ஆயுதங்களுடன் 9 வது இடத்திலும் உள்ளன.