உலகத்திலேயே விலையுர்ந்த அரியவகை உருளைகிழங்கின் விலை என்ன தெரியுமா? 

Le Bonnotte

உலகளவில் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் காய்கறி வகைகளுள் மிக முக்கியமானது உருளை கிழங்கு. இந்தியா மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உருளை கிழங்குகளை மக்கள் விரும்பி உண்கின்றனர். பல ஐரோப்பிய நாடுகளில் உருளை கிழங்கு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. பணக்காரர்கள் மட்டும் இல்லாமல், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களும் எளிதில் வாங்கக்கூடிய விலையில் உருளை கிழங்கு விற்கப்படுவதாலேயே இது அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் உருளை கிழங்கில் அரியவகை கிழங்கின் விலை, அதை விரும்பி உண்ணும் மக்களின் வாயை பிளக்க வைத்துள்ளது. மற்ற காய்கறிகளைப்போல உருளை கிழங்கிலும் பல வகைகள் உள்ளன. இதில் பிரான்ஸ் நாட்டில் விளையும் அரிய வகை உருளை கிழங்கின் விலை தான் பலரையும் ஆச்சரியத்திக் ஆழ்த்தியுள்ளது. 

பிரான்சில் விளையும் அதிசய உருளை கிழங்கு 

பிரான்ஸ் நாட்டில் உள்ள இலே டி நொய்ர்மோடியர் (Ile De Noirmoutier) என்கிற தீவில், லே பொன்னேட்டே (Le Bonnotte) என்னும் அரிய வகை உருளை கிழங்கு விளைகிறது. லே பொன்னேட்டே என்னும் இந்த உருளை கிழங்கு ஒரு கிலோ ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை விற்கப்படுகிறது. 

லே பொன்னேட்டேவின் சிறப்பு

லே பொன்னேட்டே வகை உருளை கிழங்கி பிரான்ஸ் நாட்டில் உள்ள இலே டி நொய்ர்மோடியர் என்னும் தீவில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இது 50 சதுர மீட்டர் பரப்பளவில் மணலில் பயிரப்படுகிறது. இந்த அரியவகை உருளை கிழங்கை விளைவிக்க பாசி மற்றும் கடற்பாசி இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் தனித்துவமான வளரும் விதமே லே பொன்னேட்டே வகை உருளை கிழங்கிற்கு சிறப்பான நறுமணத்துடன் கூடிய சுவை, உப்புத்தன்மை, எலுமிச்சை மற்றும் குறைந்த அளவிலான வால்நட்டின் சத்து (walnuts) ஆகியவற்றை அளித்து பிற வகை உருளை கிழங்கிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மேலும் இந்த வகை உருளை கிழங்குகளை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யமுடியாது மாறாக அதனை வேலையாட்களை கொண்டே அறுவடை செய்ய வேண்டும். ஓர் ஆண்டில் பத்து நாட்கள் மட்டுமே லே பொன்னேட்டே உருளை கிழங்கை கிடைக்கும்.

அறுவடை நாட்கள் 

மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் அறுவடையில் 2500 ஊழியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மற்ற வகை உருளை கிழங்குடன் இது பயிரிடப்பட்டாலும் இதனை மிகவும் பத்திரமாக பிரித்து அறுவடை செய்ய வேண்டும். ஒரு வருடத்திற்கு மொத்தம் ஒரு லட்சம் கிலோ மட்டுமே லே பொன்னேட்டே உருளை கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. 

லே பொன்னேட்டே உருளை கிழங்கின் தோல், அது பயிரிடப்படும் கடற் மணற்பரப்பு மற்றும் கடல் நீரில் உள்ள நறுமணங்கள், சுவையை தன்னகத்தே ஈர்த்துக்கொள்கிறது. இதனால் இந்த உருளை கிழங்கின் தோலுக்கும் தனி சத்துக்கள் இருப்பதால், தோலுடனே லே பொன்னேட்டேவை சமைத்து சாப்பிட அதனை பயிர் செய்கிறவர்களும், உணவியல் நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்.  சமையற்கலை நிபுணர்கள், உணவு ஆய்வாளர்கள் மத்தியில் லே பொன்னேட்டே உருளை கிழங்கு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. 

ஏலம் விடப்படும் லே பொன்னேட்டே

உணவு சந்தையில் இந்த உருளை கிழங்கை வாங்க போட்டி நிலவுவதால், இது பிரத்தியேகமான ஏலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் தனித்தன்மையும் பிரத்தியேகத்தன்மையும் லே பொன்னேட்டேவை விலை மதிப்பின் அடையாளமாக வைத்துள்ளது.