தமிழ்நாட்டில் வெறிச்சோடிய ஆதிபுரூஷ் பட காட்சிகள்

adipurush

கிராஃபிக்ஸில் உருவான ராமாயணம்

ராமாயண கதையை அதீபுரூஷ் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது. இப்படத்தின் இசை வெளியீடு மிகப் பிரண்டமாக நடைபெற்று வந்த நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ள நிலையில், பிரபாஸ், க்ரீத்தி சனோன், சைஃப் அலிகான், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமயண கதை என்பதால், இப்படத்தின் அனைத்து காட்சிகளும் கிராஃபிக்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பாகுபலி புகழ் பிரபாஸ் ராமனாகவும், க்ரீத்தி சனோன் சீதையாகவும்,  சயீஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். 

அனுமனுக்கு இருக்கை

ஆதிபுரூஷ் திரைபடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ளது. வட இந்தியாவில் இந்த திரைபடத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படம் வெளியாகும் ஒவ்வொரு திரையங்கிலும் ஒரு இருக்கை அனுமனுக்கு வைக்க உள்ளதாக அதிபுரூஷ் திரைப்படத்தின் வெளியீட்டு நிறுவனம் அறிவித்து சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிரான பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. 

காலியான திரையரங்குகள்

இந்நிலையில் ஆதிபுரூஷ் திரப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வட இந்தியாவின் கிடைத்த வரவேற்பு போல் தமிழ்நாட்டில் இத்திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை, இப்படத்தின் முதல்காட்சியில் 10 இருக்கைகள் மட்டுமே முன் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பல காட்சிகள் காலியான திரையங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு திரையரங்கிலும் மிகவும் சொற்பமாக டிக்கெட்டுகளே விற்பனையாகியுள்ளதால், படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.