இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயற்சி - இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் பேட்டி

east governor of srilanka

தமிழ்நாட்டின் வீரமும், கலாச்சாரமும்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இலங்கை உவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் ,கிழக்கு மாகாண ஆளுநரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல மாநில கௌரவர் தலைவருமான செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போத் அவர் பேசியதாவது; தமிழ்நாட்டின் வீரமும், கலாச்சாரமும் போற்றக்கூடியது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் திருச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். 

மீனவர்கள்  மேல் எந்த தவறும் இல்லை

இந்திய மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே கடல் எல்லையை தாண்டுவதில்லை, கடலுக்கு எல்லை இல்லை சில இயற்கை சீற்றங்களால் அவர்கள் வலி மாறி வந்து விடுகிறார்கள். மீனவர்கள்  மேல் எந்த தவறும் இல்லை, ஒவ்வொரு முறையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது,  அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவிக்கும் முயற்சியை தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம்.  இந்த செயல் இன்று, நேற்று அல்ல கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். இனியும் நாங்கள் செய்வோம். இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.