கண் நோய்களைக் கண்டறியும்  AI செயலி.. 11 வயதில் டெக்னாலஜியில் அசத்தும் மலையாள சிறுமி.!

website post (48)

கனவுகளை நனவாக்குவதை வயதோ அல்லது வேறு எந்த வகையான தடையோ தடுக்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு சாட்சியம் லீனா ரஃபீக் என்ற பதினோரு வயது சிறுமி தனது coding திறமையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கண் நோய்களை கண்டறியும் திறன்

துபாயைச் சேர்ந்த இந்திய சிறுமி தனது 11 வயதில் கண் நோய்களை கண்டறிய Artificial Intelligence2 அடிப்படையிலான செயலியை உருவாக்கியுள்ளார். 11 வயதில் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி செயலியை உருவாக்கியதற்காக லீனா ரஃபீக் பாராட்டுக்களை பெற்று வருகிறார். தானாகவே கோட் எழுத கற்றுக் கொண்ட லீனா, Ogler Eye scan என்ற AI அடிப்படையிலான செயலியை உருவாக்கினார். அவர் தனது 10 வயதில் இந்த செயலியை உருவாக்கினார். இந்த மொபைல் செயலியானது தனித்துவமான ஸ்கேனிங் செயல்முறை மூலம் பல்வேறு கண் நோய்கள் மற்றும் நிலைமைகளைக் கண்டறியும் திறன் கொண்டது.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது

"நான் 10 வயதில் இந்த இந்த செயலியை உருவாக்கினேன். Ogler தனித்துவமான ஸ்கேனிங் செயல்முறை மூலம் பல்வேறு கண் நோய்கள் மற்றும் நிலைமைகளைக் கண்டறியும் திறன் கொண்டது. உங்கள் ஐ போன், மேம்பட்ட கணினி பார்வை மற்றும் இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, Ogler ஒளி மற்றும் வண்ணத் தீவிரம், தூரம் மற்றும் பார்வைப் புள்ளிகள் போன்ற பல்வேறு அளவுருக்களைப் பகுப்பாய்வு செய்து சட்ட வரம்பிற்குள் கண்களைக் கண்டறிய முடியும்" என்று லீனா தனது சமூக வலைதள பதிவில் பதிவிட்டுள்ளார்.

"ஸ்கேன் தரம் உறுதி செய்யப்பட்டவுடன், சாத்தியமான கண் நோய்கள் அல்லது ஆர்கஸ், மெலனோமா, ப்டெரிஜியம் மற்றும் கண்புரை போன்ற நிலைமைகளைக் கண்டறிய பயிற்சியளிக்கப்பட்ட மாதிரிகளை இந்த செயலி பயன்படுத்துகிறது. இந்த செயலி எந்த மூன்றாம் தரப்பு நூலகங்கள் அல்லது தொகுப்புகள் இல்லாமல் ஸ்விஃப்ட்யூஐ மூலம் சொந்தமாக உருவாக்கப்பட்டது. இந்த புதுமையான செயலியை உயிர்ப்பிக்க ஆறு மாதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்தேன்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பல்வேறு கண் நிலைகள், கணினி பார்வை, வழிமுறைகள், இயந்திர கற்றல் மாதிரிகள் மற்றும் ஆப்பிள் iOS மேம்பாட்டின் மேம்பட்ட நிலைகள், சென்சார்கள் தரவு, AR, CreateML, CoreML மற்றும் பலவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். Ogler மாடல்கள் மற்றும் அதன் திறன்களை மேம்படுத்துவதில் நான் தொடர்ந்து பணியாற்றும்போது உங்கள் ஆதரவு மற்றும் பரிந்துரைகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்றும் ஏதேனும் கருத்து அல்லது பரிந்துரைகளுடன் என்னைத் தொடர்புகொள்ளவும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.