மார்ச்-28-ம் தேதி வானில் நிகழும் ஓர் அரிய நிகழ்வு.! கண்ணால் பார்க்கும் ஓர் அரிய வாய்ப்பு.!

website post (16)

மார்ச் 28 அன்று பூமிக்கு அருகே 5 கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றை அடுத்த வாரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 5 கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும் என்றும், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அடுத்த வாரம் 28ம் தேதி (செவ்வாய் கிழமை) நடந்தாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அந்த நிகழ்வானது அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும்  வானத்தில் தெரியக்கூடும் என கூறப்படுகிறது.

பூமியில் எங்கிருந்தும் "கிரக அணிவகுப்பை" உங்களால் பார்க்க முடியும், ஆனால் வடக்கு அரைக்கோளத்தில் உள்ளவர்கள் இந்த கிரகங்களைப் பார்ப்பதற்கு எளிதாக தெரியும் என்று ஸ்கை & டெலஸ்கோப் பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ரிக் ஃபியன்பெர்க் கூறுகிறார். இது ஒரு உண்மையான கிரக சீரமைப்பு இல்லை என்றாலும், சூரியனின் பார்வையில் இருந்து கிரகங்கள் ஒரு நேர் கோட்டில் இருக்காது என்பதால், சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு சில கிரகங்களை ஒரே நேரத்தில் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று ஃபியன்பெர்க் கூறுகிறார்.

இதற்கு முன்னர், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அந்த அரிய நிகழ்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெரிந்தது. அப்போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.