Tamil News
Tamil News
Thursday, 16 Nov 2023 11:30 am
Tamil News

Tamil News

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாளை மறுநாள் (நவம்பர்-19) ஞாயிற்றுக்கிழமையன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இன்னும் சில முக்கியத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்திருக்கிறது. 

India Vs Australia

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியே பெறாமல் தொடர்ந்து வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்த அரைஇறுதிப்போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி அரைஇறுதிப் போட்டி வரை வந்து வாய்ப்பை தவறவிட்டது. நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இதனடிப்படையில், ஆஸ்திரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் நாளை மறுநாள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

வருகை தரும் முகேஷ் அம்பானி.! 

இறுதிப்போட்டியை கண்டுகளிக்க தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கலந்துகொள்ள இருக்கிறார். நாளை மறுநாள் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பிசிசிஐ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்க்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதுதவிர, ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் இறுதிப்போட்டியை கண்டுகளிக்க இந்தியா வருகை தர இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இறுதிப்போட்டியை காண வருவார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. 

போட்டி தொடங்குவதற்கு முன்..

அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் பங்குபெறும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இரு நாட்டு  அணிகளுடைய கேப்டன்களான ரோகித் ஷர்மா மற்றும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு போட்டிக்கான தொப்பியை, போட்டி தொடங்குவதற்கு முன் இருநாட்டு பிரதமர்கள் இணைந்து வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

மழை வருமா.?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியைக் காண உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், மழை வந்து குறுக்கிடுமா என்பதையும் சற்று பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில், அகமதாபாத்தில் நாளை மறுநாள் வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என்று இந்திய வானிலை மையம் நிலவரத்தை வெளியிட்ள்ளது. அதில், நாளை மறுநாள் அகமதாபாத்தில் மழை வருவதற்க்கான வாய்ப்பில்லை என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் இருக்குமென்றும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் இருக்குமென்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.