Tamil News
Tamil News
Sunday, 20 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

இந்தியாவில் உலகக் கோப்பை 

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்துடனான கிரிக்கெட் தொடரை அண்மையில் நிறைவு செய்தது. இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் போட்டிகள் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதனையடுத்து வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாத இந்தியா

கடந்த 10 வருடங்களாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்ட நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி அறிவிப்பு

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இன்று மதியம் 12 மணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அஜித் அகர்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கபட்டது. 

அதன் விவரம் வருமாறு:-

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்